சோமவாரத்தை முன்னிட்டு சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

சோமவாரத்தை முன்னிட்டு பெரம்பலூர் சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-12-04 13:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில் டிசம்பர் 4ஆம் தேதி கார்த்திகை மாத மூன்றாம் வார சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது, காலை விக்னேஸ்வர பூஜை முடித்து சங்குகளுக்கு புனித நீர் நிரப்பி வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜைகள் முடித்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மதியம் பிரம்மபுரீஸ்வரர் சிவபெருமானுக்கும் மற்றும் அம்பாளுக்கு பால் தயிர் சந்தனம் பழங்கள் இளநீர் வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் முடித்து பக்தர்கள் கைகளினால் எடுத்துச் செல்லப்பட்ட 108 சங்குங்களையும் சிவனுக்கு அபிஷேகம் செய்யட்டது அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்திற்கு பிறகு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது விழாவில் செயல் அலுவலர் கோவிந்தராஜ் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், மகேஸ்வரன், சத்தியராம்குமார், ராஜமாணிக்கம் மற்றும் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர் பூஜைகளை கௌரிசங்கர் மற்றும் முல்லை சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.
Tags:    

Similar News