விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவி பலி

Update: 2023-11-20 09:02 GMT

மாணவி பலி


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென்காசி மாவட்டம் பூ வாசுதேவநல்லூர் அருகே உள்ள துரைசாமிபுரம் புது காலனியை சேர்ந்தவர் ஹரிராமர்.இவரது 15 வயது மகள் தென்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். ஹரி ராமர் திருப்பூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த வாரம் ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது தனது மகள் சரியாக படிக்காமல் இருப்பதை கண்டு கண்டித்துள்ளார். இனி நன்றாக படிக்க வேண்டும் என்றும், வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகளை பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் பின்னர் ஹரி ராமர் திருப்பூருக்கு புறப்பட்டுச் சென்று விட்டார். இந்நிலையில் தந்தை கண்டித்ததால் மன வேதனை அடைந்த சிறுமி நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

Advertisement

இதனைக் கண்ட அவரது தாயார் மற்றும் உறவினர்கள் சிறுமியை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் சண்முக லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News