10ம் வகுப்பு பொதுத்தேர்வு : 9 பேர் மாவட்டத்தில் முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.48 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். 9 மாணவர்கள் அதிகபட்சமாக 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றனர். 9 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன.

Update: 2024-05-10 08:53 GMT

மாணவி வர்ஷா ஜெய்ஸ்ரீக்கு பாராட்டு 

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 11 ஆயிரத்து 549 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் மாணவிகள் 5474 நபர்களும் மாணவர்கள் 5975 நபர்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 449 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 90.48 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் மாவட்ட அளவில் 27வது இடத்தை பிடித்துள்ளனர். மாணவர்கள் 86.61% மாணவிகள் 94. 30 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்

. கடந்த ஆண்டு 86.31 சதவீதம் தேர்ச்சி இருந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 4.17 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்பது அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக 9 மாணவ மாணவிகள் 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். லட்சுமிபுரம் குட் சாமரிட்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி வர்ஷா ஜெய்ஸ்ரீ தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100 அறிவியல் 100, சமுக அறிவியல் 100 மதிப்பெண்கள் என 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தனது படிப்புக்கு பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உறுதுணையாக இருந்ததால் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்ததாகவும் மருத்துவராக வேண்டும் என்பதே தனது கனவு என்றும் தெரிவித்துள்ளார். தினந்தோறும் இரவு 11 மணி வரை படித்ததாகவும் தனது வெற்றிக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார். .

Tags:    

Similar News