தனியார் தொழிற்சாலையில் 110 பாம்புகள்?

சேலம் மாவட்டம் ,மேட்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 110 பாம்புகள் பிடிபட்டன.

Update: 2024-02-05 13:26 GMT

சேலம் மாவட்டம் ,மேட்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 110 பாம்புகள் பிடிபட்டன.

மேட்டூர் அருகே மேச்சேரியில் தனியாருக்கு தேனிரும்பு தொழிற்சாலை (JSW)உள்ளது. இங்கு சுமார் 3,000 கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் ஏராளமான பாம்புகள் சுற்றித்திரிகின்றன. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அவ்வப்போது பாம்பு கடிக்கு ஆளாகி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற சம்பவம் நடந்து வருகிறது.

பாம்புகளைப் பிடிக்க மேட்டூர் வனத்துறையினருக்கு தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினர் 12 பேர் கொண்ட குழுவினர். தொழிற்சாலைக்கு வரவழைக்கப்பட்டனர்.கடந்த மாதம்  27-ம் தேதி முதல் இன்று வரை 10 நாட்களாக  வனத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் பாம்பு பிடிக்கும் படியில் ஈடுபட்டனர்.

இதில் நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சாரை பாம்பு, கொம்பேரிமூக்கன், பச்சை பாம்பு என மொத்தம் 110 பாம்புகள் பிடிக்கப்பட்டு மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. பிடிபட்ட பாம்புகள் வாகனம் மூலம் எடுத்து செல்லப்பட்டு கொளத்தூர் அருகே வட பர்கூர் காப்பு காட்டில் விடப்பட்டது.

Tags:    

Similar News