செபத்தையாபுரம் ஆலயத்தில் 118வது பிரதிஷ்டை அசன விழா

செபத்தையாபுரத்தில் உள்ள பழமையான கிறிஸ்தவ ஆலயத்தில் தெய்வீக உயிர்த்தெழுதலின் 118வது பிரதிஷ்டை அசன விழா நடைபெற்றது.;

Update: 2024-04-06 01:56 GMT

செபத்தையாபுரம் ஆலயத்தில் 118வது பிரதிஷ்டை அசன விழா

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள செபத்தையாபுரத்தில் பழமை வாய்ந்த ஆலயத்தில் அசன விழா ஆண்டு வரும் வெருகு சிறப்பாக கொண்டாடப்படும். இதன்படி இந்த ஆண்டிற்கான 118 வது ஆலய பிரதிஷ்டை அசன விழா ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இதில் திருவிருந்து ஆராதனை, துதி ஆராதனை, உபவாச ஜெபம், கன்வென்சன் கூட்டம் நடைபெற்றது. சேகர குரு இம்மானுவேல் ஆரம்ப ஜெபம் செய்து அசன விழாவை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின விருந்தினராக தொழில் அதிபர் எஸ்டிகே ராஜன், ஜெபச்சந்திரன், எஸ்டி அருண் ஜெபக்குமார் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரகாஷ் ராஜ்குமார், அரவிந்த், ஜார்ஜ், சாந்து சீலன், எஸ்எஸ்கே சோபன் பாலசிங், அருண் மற்றும் சபை ஊழியர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News