கன்னியாகுமரி: 11-ம் வகுப்பில்  93.96% பேர் தேர்ச்சி

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், குமரி மாவட்டம் 93.96% தேர்ச்சி பெற்றுள்ளது.;

Update: 2024-05-15 06:53 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 279 மாணவ, மாணவிகள் பிளஸ் 1 தோ்வு எழுதினா். இதில், 20 ஆயிரத்து 933 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விழுக்காடு 93.96 சதவீதமாகும். தோ்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 9 ஆவது இடத்தை பெற்றுள்ளது. 

மாவட்டத்தில் 10 ஆயிரத்து 806 மாணவா்கள் தோ்வு எழுதியதில் 9 ஆயிரத்து 756 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விழுக்காடு 90.28 சதவீதம் ஆகும். 11 ஆயிரத்து 473 மாணவிகள் தோ்வு எழுதியதில் 11 ஆயிரத்து 177 மாணவிகள் தோ்ச்சி அடைந்துள்ளனா். தோ்ச்சி விழுக்காடு 97.42 சதவீதமாகும்.

மாணவா்களை விட மாணவிகளே அதிக தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா். குமரி மாவட்டத்தில் 64 அரசுப்பள்ளிகளைச் சோ்ந்த 6 ஆயிரத்து 271 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில் 5 ஆயிரத்து 662 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.தோ்ச்சி விழுக்காடு 95.79 சதவீதமாகும். அரசுப்பள்ளிகள் தோ்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் 10 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

மேலும், 9 அரசுப்பள்ளிகள் உள்பட 74 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா். நாகா்கோவில் கல்வி மாவட்டத்தில் அருமநல்லூா், பெருவிளை, அனந்தநாடாா்குடி, ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், வாழையத்துவையல் ஆதிதிராவிடா்நலத்துறை பள்ளி, சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் காதுகேளாதோா் பள்ளி, நட்டாலம் அரசுப் பள்ளி, பத்துகாணியில் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் செயல்படும் உண்டு உறைவிட பள்ளி ஆகியவை 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.      பிளஸ் 1 தோ்வில் கடந்தஆண்டு (2023) கன்னியாகுமரி மாவட்டம் 94.02 சதவீதம் தோ்ச்சி பெற்றிருந்தது. நிகழாண்டு 93.96 சதவீத தோ்ச்சியை பெற்று சற்று பின்தங்கியுள்ளது.

Tags:    

Similar News