சிறுவன் கொலை வழக்கு: சம்பவ இடத்திற்கு எஸ்.பி நேரில் ஆய்வு
கள்ளிக்குடியில் 12 வயது சிறுவன் கொலை வழக்கில், சம்பவ இடத்தில் எஸ்.பி நேரில் ஆய்வு செய்தார்.;
Update: 2023-12-05 10:56 GMT
கள்ளிக்குடியில் 12 வயது சிறுவன் கொலை வழக்கில், சம்பவ இடத்தில் எஸ்.பி நேரில் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் சரகம் கள்ளிக்குடி, திருமலைராஜன் ஆற்றங்கரையில், நிம்மேலி- குச்சிபாளையம் அக்ரஹாரத் தெருவை சேர்ந்த சுமன் என்பவரின் மகன் அரவிந்த்( வயது 12 )என்ற சிறுவன் கொலை வழக்கு தொடர்பாக நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியான அதே ஊரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மகன் இளவரசன் (வயது 28 )என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து கொலை வழக்கு தொடர்பாக நன்னிலம் காவல் ஆய்வாளருக்கு அறிவுரைகள் வழங்கினார்.