13வயது பள்ளி சிறுக்கு பாலியல் தொல்லை 90வயது கிழவர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 90வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டசிறையில் அடைப்பு

Update: 2024-12-26 02:49 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முத்தூர் வடுகவிருட்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 90) . இவர் 13வயது சிறுமியை அழைத்து கண்ணில் மருந்து போட வைத்துள்ளார்அப்போது நாராயணசாமி சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டுள்ளார் கூச்சலைக் கேட்டு சிறுமியின் உறவினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு அந்த முதியவரை திட்டி விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு நாராயணசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News