இரவு சோதனையில் 13 ஆட்டோக்கள் பறிமுதல்

மாவட்ட கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின் பேரில் நேற்று இரவு நடைபெற்ற சோதனையில் 13 ஆட்டோக்கள் பறிமுதல்.

Update: 2024-03-06 17:50 GMT

ஆட்டோக்கள் பறிமுதல்

தேனியில் முறையான ஆவணங்கள் இன்றி சுற்றி திரியும் ஆட்டோக்கள் மாவட்ட கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின் பேரில் நேற்று இரவு நடைபெற்ற சோதனையில் 13 ஆட்டோக்கள் பறிமுதல். ஆட்டோக்கள் வைத்து தொடர் குற்றச்சபங்களில் ஈடுபடுவதாக எழந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் இன்றியும் மது போதையிலும் ஆட்டோக்களை இயக்கிய நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து 13 ஆட்டோக்கள் பறிமுதல்.

தேனியில் இரவு நேரங்களில் ஆட்டோக்கள் ஓட்டும் நபர்கள் மது போதையிலும் பயணிகளிடம் வழிப்பறி பெண்களுக்கு பாலியல் ரீதியான குற்ற செயல்களில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தொடர்ச்சியாக தகவல் வர துவங்கிய நிலையில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஆட்டோக்கள் தணிக்கை செய்யவும் ரோந்து பணிகள் மேற்கொள்ளவும் பழனிசெட்டிபட்டி மற்றும் தேனி அல்லிநகரம் காவல் நிலையங்களுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு நேரத்தில் பழனி செட்டிபட்டி பகுதியில் உள்ள வெற்றி திரையரங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களை காவல்துறையினர் பரிசோதனை செய்ய முற்பட்டபோது பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த 13 ஆட்டோக்களை சோதனை செய்த பொழுது ஆட்டோ ஓட்டுநர்கள் மது போதையிலும் ஆட்டோக்கு உண்டான முறையான ஆர்சி புக் இல்லாமலும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமலும் TN 60 தேனி மாவட்ட ஆட்டோக்கள் இல்லாமல் மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட வேற்று மாவட்ட ஆட்டோக்கள் என்பது தெரிய வந்தது.

கடந்த ஆண்டு கேரளா வாலிபர்கள் ஆட்டோவில் கடத்தப்பட்டு அவரிடம் பணம் செல்போன் பறிக்கப்பட்டு கொலை வெறி தாக்குதல் நடைபெற்ற நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களின் செயல்கள் குறித்து கண்காணிக்காத காவல்துறையினர் ஓர் ஆண்டுக்குப் பிறகு தற்போது ஆட்டோக்களை பறிமுதல் செய்து வருவது மிகத் தாமதமான நடவடிக்கை என்றாலும் பாராட்டக்கூடிய விஷயமாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News