ரூ.1.38 கோடி மதிப்பில் 13 குப்பை வாகனங்கள் - மேயர் துவக்கி வைப்பு

Update: 2023-12-17 02:30 GMT

துவக்கி வைப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் மக்கு மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாகனங்கள் மூலம் அன்றாடம் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநகராட்சியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதனிடையே திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லூர் மூன்றாவது மண்டலம் பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை அள்ளுவதற்காக,  SWMS தனியார் ஒப்பந்த நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடியை 20 லட்சம் மதிப்பீட்டில் 3 லாரிகள் மற்றும் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 10 பேட்டரி வாகனங்கள் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக வாங்கப்பட்டது. அதனை   திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தனர்.



Tags:    

Similar News