திருக்கோஷ்டியூர் அருகே 13 கிலோ குட்கா பறிமுதல்

திருக்கோஷ்டியூர் அருகே 13 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-03-05 11:56 GMT

காவல் நிலையம் 

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் போலீசார் பட்டமங்கலம் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது எம்.புதுார் தண்ணீர் தொட்டி அருகில் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அதிலிருந்த தடை செய்யப்பட்டா குட்கா பொருட்கள் 13 கிலோவை கைப்பற்றினர்.

விசாரணையில் அவர்கள் திருக்கோஷ்டியூரை சேர்ந்த செல்லத்துரை மகன் ராஜா (25), பாண்டி மகன் அன்பரசன் (29) என்பது தெரியவந்த நிலையில் திருக்கோஷ்டியூர் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News