மொபட்டில் எடுத்து சென்ற 13 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் மொபட்டில் எடுத்து சென்ற 13 கிலோ வெள்ளி கொலுசுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-10 08:51 GMT

சேலம் மாவட்டத்தில் மொபட்டில் எடுத்து சென்ற 13 கிலோ வெள்ளி கொலுசுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட மூலப்பிள்ளையார் கோவில் சாலை சந்திப்பு அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக மொபட்டில் வந்தவரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் மொபட்டில் 13 கிலோ வெள்ளி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் விசாரணையில் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த முனீர் (வயது 40) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் வெள்ளி கொலுசுக்கு உரிய ஆவணம் இல்லாததால் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News