திண்டுக்கல் அருகே 45 நாட்களில் 13 பேர் ரயிலில் அடிபட்டு இறப்பு
திண்டுக்கல் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது விழிப்புணர்வு தேவை என போலீசார் அறிவுறுத்தினர்.
திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரெயில் மோதி பொதுமக்கள் உயிரிழப்பது தொடர் நிகழ்வுகளாக மாறி வருகின்றன. விதிமுறைகளை மீறி ரயில் தண்டவாளத்தை கடப்பதே இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழ காரணமாக உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரெயில் தண்டவாளங்களை கடப்பது எந்நேரமும் ஆபத்தை விளைவிக்கும் என பல முறை எச்சரித்தும் மக்கள் அதை கேட்பதில்லை என்று அவர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.கடந்த 45 நாட்களில் 13 பேர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்.
இந்த மாதம் 15 நாட்களுக்குள் ஏழு பேர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரெயில்வே தண்டவாளத்தில் தற்கொலை செய்யக்கூடிய எண்ணத்தில் வரக்கூடிய நபர்களாக தெரிய வந்தால் ரெயில்வே போலீஸ் உதவி எண் 1512 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ரெயில்வே போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.