திருச்சி உள்பட 13 இடங்களில் வெயில் சதம்
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் திருச்சியில் அதிகபட்ச வெயில் அளவு பதிவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் பல இடங் களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. அந்த வகையில் நேற்று 13 இடங்களில் சதம் அடித்துள் ளது. இதில் அதிகபட்சமாக கரூரில் 106.7 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
100 டிகி ரிக்கு மேல் பதிவான இடங்க ளின் விவரம் வருமாறு:- கரூர் - 106.7 டிகிரி (41.5 செல் சியஸ்) ஈரோடு - 106.16 டிகிரி (41.2 செல்சியஸ்) சேலம் - 106.16 டிகிரி (41.2 செல்சியஸ்) தர்மபுரி - 105.8 டிகிரி (41 செல்சியஸ்) திருப்பத்தூர் - 104.72 டிகிரி (40.4 செல்சியஸ்) திருச்சி 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்) மதுரை 104 டிகிரி (40 செல்சியஸ்) வேலூர் - 104 டிகிரி (40 செல்சியஸ்) நாமக்கல் - 104 டிகிரி (40 செல்சியஸ்) கோவை - 103.64 டிகிரி (39.8 செல்சியஸ்) திருத்தணி-102.74 டிகிரி (39.3 செல்சியஸ்) தஞ்சாவூர் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்) பாளையங்கோட்டை - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)