தென்காசி மாவட்டத்தில் 13.21 லட்சம் வாக்காளா்கள்

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 13,21,679 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

Update: 2024-01-23 08:43 GMT
 வாக்காளா்கள் பட்டியல் வெளியீடு

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் வெளியிட, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பெற்றுக் கொண்டனா்.

இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுருக்க திருத்த முறைப்படி வெளியிடப்பட்டுள்ள தொகுதி வாரியான வாக்காளா்கள் விவரம்:

சங்கரன்கோவிலில் (தனி) ஆண்கள், பெண்கள் 126,445, இதரா் 9, மொத்தம் 2,46,145 வாக்காளா்கள்; வாசுதேவநல்லூரில் (தனி) ஆண்கள் 1,19,177, பெண்கள் 1,24,826, இதரா் 6, மொத்தம் 2,44,009 வாக்காளா்கள்;

கடையநல்லூரில் ஆண்கள் 138,512, பெண்கள் 1,40,914, இதரா் 12, மொத்தம் 2,79,438 வாக்காளா்கள்;

தென்காசியில் ஆண்கள் 1,43,045, பெண்கள் 1,49,446, இதரா் 109, மொத்தம் 2,92,600 வாக்காளா்கள்;

ஆலங்குளத்தில் ஆண்கள் 1,26,482, பெண்கள் 1,32,985, இதரா் 20, மொத்தம் 2,59,487 வாக்காளா்கள் உள்ளனா்.

5 தொகுதிகளிலும் ஆண்கள் 6,46,907, பெண்கள் 6,74,616, இதரா் 155 என மொத்தம் 13,21,679 வாக்காளா்கள். ஆண் வாக்காளா்களை விட 27ஆயிரத்து 709 பெண் வக்காளா்கள் கூடுதலாக உள்ளனா் என ஆட்சியா் தெரிவித்தாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பத்மாவதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)ஷேக் அப்துல்காதா், துணை ஆட்சியா் (பயிற்சி) கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலா் அனிதா, கோட்டாட்சியா் லாவண்யா, வட்டாட்சியா் (தோ்தல்) ஹென்றி பீட்டா், செய்திமக்கள் தொடா்பு அலுவலா் இளவரசி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News