ஆத்தூரில் ரூ.1.33 கோடிக்கு பருத்தி வர்த்தகம்

ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ.1 கோடியே 33 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.

Update: 2024-03-19 03:21 GMT
சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 684 விவசாயிகள் 4877 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.21 வியாபாரிகள் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப மறைமுக ஏலத்தில் கலந்துகொண்டு விலை நிர்ணயம் செய்திருந்தனர்.இதில் பி.டி.ரகம் குவிண்டால் ரூ.7,169முதல் ரூ.8,845 வரை, டி.சி.ஹெச்., ரக குவிண்டால் ரூ.9,869 முதல் 11, 689 ரூபாய் வரை, கொட்டு பருத்தி (கழிவு) 4, 319முதல் 6,699 வரை விற்பனையானது. மொத்தம் 4877மூட்டை , 1755.64 மொத்த குவிண்டால் பருத்தி ரூ.1கோடியே 33 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
Tags:    

Similar News