வேடசந்தூர் ஒன்றியத்தில் உன்னி காய்ச்சலால் 14 பேர் பாதிப்பு
வேடசந்தூர் ஒன்றியத்தில் உன்னி காய்ச்சலால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-01-08 12:17 GMT
வேடசந்துார் ஒன்றியத்தில் மூன்று ஊராட்சிகளில் உன்னி காய்ச்சலால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வட்டார மருத்துவர் பொன்.மகேஸ்வரி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: வேடசந்துார் ஒன்றியத்தில் நாகம்பட்டி ஊராட்சி சேணன்கோட்டை, மாரம்பாடி ஊராட்சி மாரம்பாடி, வி.புதுக்கோட்டை ஊராட்சி நாகக்கோனானுார் கிராமபகுதிகளில் கால்நடைகளுக்கான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கும் உன்னி காய்ச்சல் பரவி வருகிறது.
அந்த வகையில் சேணன் கோட்டையில் 2 பேர், மாரம்பாடியில் 8 பேர், நாக கோனானுாரில் 4 பேர் என 14 பேர் பதிக்கப்பட்டுள்ளனர்.காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை செய்து வருகிறோம். விரைவில் உன்னி காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும் என்றார்.