ஈரோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் நகை கொள்ளை

ஈரோடு அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரின்  வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 14 சவரன் நகை கொள்ளையடிக்கபட்டுள்ளது.

Update: 2024-06-11 15:01 GMT

கொள்ளையடிக்கப்பட்ட வீடு

ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டை குமரன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் துறை உதவி ஆய்வாளரான ராஜேந்திரன்.இவரது மனைவி நாகேஸ்வரி இவர் சத்துணவு பணி செய்து வருகிறார். இவர்களுக்கு சந்தோஷ் குமார் என்ற மகனும் உள்ளார்.

சந்தோஷ் குமாருக்கு திருமண மாகி தனியாக வசித்து வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் இறந்து விட்டார்.இந்த நிலையில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு நாகேஸ்வரி சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பிய பொழுது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.

மேலும் உள்ளே இருந்த பீரோக்களின் கதவுகள் உடைக்கப்பட்டும் அதில் இருந்த 14 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. மேலும் இதனை தொடர்ந்து தாலுக்கா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா காவல்துறையினர் தடயங்களை கைப்பற்றியும் ,

மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து உள்ள தாலுக்கா காவல்துறையினர் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags:    

Similar News