கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.1.41 கோடி வர்த்தகம்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ரூ.1.41 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

Update: 2024-05-14 06:40 GMT

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ரூ.1.41 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 1.41 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கமிட்டிக்கு, எள் 950 மூட்டை, மக்காச்சோளம் 260, சிவப்பு சோளம் 30, வேர்க்கடலை 15, உளுந்து 7, நாட்டு கம்பு 6 ராகி 4, எச்.பி.கம்பு 2, தலா ஒரு மூட்டை ஆமணக்கு, கொள்ளு உட்பட 1276 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை எள் 11,005, மக்காச்சோளம் 2,243, சிவப்பு சோளம் 5,332, மணிலா 6,856, உளுந்து 7,204, நாட்டு கம்பு 3,711 ராகி 2,979, எச்.பி.கம்பு 2,320, ஆமணக்கு 4,979, கொள்ளு 3,750 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக ஒரு கோடியே 41 லட்சத்து 28 ஆயிரத்து 483 ரூபாய்க்கு நேற்று வர்த்தகம் நடந்தது. சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 72, எள் 43, ஆமணக்கு ஒரு மூட்டை உட்பட 116 மூட்டை விளை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,271, எள் 9,563, ஆமணக்கு 4,790 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 5 லட்சத்து 97 ஆயிரத்து 389 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் எள் 225 மூட்டை, நெல் 20, கம்பு 2, உளுந்து 2 உட்பட 249 மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை எள் 13.495, நெல் 2,101, கம்பு 8,769, உளுந்து 4,951 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.23 லட்சத்து 90 ஆயிரத்து 847 ரூபாய்க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.
Tags:    

Similar News