ராமநாதபுரம் மாவட்டத்தில் 1433ஆம் பசலிவருவாய்த்துறை தணிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 1433ஆம் பசலிவருவாய்த்துறை தணிக்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற்றது

Update: 2024-06-11 13:59 GMT

தணிக்கையில் ஈடுபட்டவர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1433ஆம் பசலிவருவாய்த்துறை தணிக்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.

இதில் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் பழனிக்குமார் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் 26 கிராமங்களில் உள்ள கணக்குகளில் இன்று ஏழு கிராமத்திற்கு உரிய கணக்குகள் சரிபாக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த தீர்வாய தணிக்கையானது 11 12 13 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும்.

இதில் நஞ்சை புஞ்சை நிலங்கள் அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய விளைபொருள்கள் எவ்வளவு என்பதைப் பற்றியும் வட்டாட்சியர் உடைய ஒவ்வொரு அலுவலகத்தில் உள்ள மொத்த தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் எவ்வளவு என்பதை மாவட்ட வருவாய்த்துறை அலுவலகம் சமர்ப்பிக்கப்படும்,

ராமநாதபுரம் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சாமிநாதன் தலைமையில் அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News