ரூ.1.44 கோடியில் அறிவுசார் மையம் திறப்பு எப்போது?
ரூ.1.44 கோடியில் அறிவுசார் மையம் திறப்பு எப்போது?;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2023-24 இன் கீழ் 1 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது. நவீன வசதி களுடன் உருவாகியுள்ள இந்த மையம் தேர்வு எழுதும் மாணவர்களும், பொதுமக்களும் பயன்பெறும் நோக்கில் கட்டப்பட்டது. ஆனால், கட்டுமானப் பணி முடிவடைந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.