விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை மகன் ராஜதுரை (24). இவர் அதே பகுதியில் உள்ள பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு சிறுமியுடன் பல முறை உறவில் ஈடுபட்டு வந்ததில் சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதில் அந்த சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜதுரை மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.