15 லட்சம் ரூபாய் மதிப்பில் பேருந்து நிறுத்தம் நேர்குடை அமைக்கும் நெடுஞ்சாலை துறையினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் பேருந்துகள் நின்று செல்லாத பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் பேருந்து நிருத்தம் நிழற்குடை அமைக்கும் நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்;

Update: 2025-11-29 10:29 GMT
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் பேருந்துகள் நின்று செல்லாத பகுதியில் சாலையோர வியாபாரிகள் கடை வைத்திருக்கக் கூடிய பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் பேருந்து நிருத்தம் நிழற்குடை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் அரசு பணம் வீணாவதை கண்டித்தும் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி பாட்டாளி மக்கள் கட்சி டாக்டர் ராமதாஸ் அணியினர் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கொட்டும் மழையில் பெண்கள் குடை பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் கடந்த பல ஆண்டுகளாக தற்காலிக மேற் கூரையில் இயங்கி வரும் நிலையில் 15 லட்சம் ரூபாய் பணத்தில் பேருந்து நிழற்குடை அமைத்து பொதுமக்களுக்கு பயனில்லாமல் அரசு பணத்தை விரயம் செய்வதாகவும் பணிகளை நிறுத்த வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்

Similar News