15 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

மக்களவை தேர்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் 15 வட்டார வளர்ச்சி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-02-08 06:33 GMT

மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் 

லோக்சபா தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் 15 பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதன்படி, பி.டி.ஓ.,க்களாக தியாகதுருகத்தில் பணிபுரியும் செந்தில்முருகன் சின்னசேலத்திற்கும், ரிஷிவந்தியம் ரங்கராஜன் கள்ளக்குறிச்சிக்கும் மற்றப்பட்டனர்.சின்னசேலம் ஜெகநாதன் தியாகதுருகத்திற்கும், கள்ளக்குறிச்சி சந்திரசேகரன் ரிஷிவந்தியத்திற்கும், கல்வராயன்மலை அண்ணாதுரை கள்ளக்குறிச்சி பைபர்நெட் பிரிவுக்கும், திருநாவலுார் ஜெயராமன் உளுந்துார்பேட்டைக்கும் மாற்றப்பட்டனர். கள்ளக்குறிச்சி பைபர்நெட் பிரிவு நாராயணசாமி திருநாவலுாருக்கும்,

உளுந்துார்பேட்டை ராஜேந்திரன் அதே அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி பி.டி.ஓ.,வாகவும், சுமதி கள்ளக்குறிச்சி ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சங்கராபுரம் அய்யப்பன் கல்வராயன்மலைக்கும், சங்கராபுரம் செல்வகணேஷ் கள்ளக்குறிச்சிக்கும், திருக்கோவிலுார் நடராஜன் ரிஷிவந்தியத்திற்கும், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் செல்லதுரை சங்கராபுரத்திற்கும், கள்ளக்குறிச்சி மோகன்குமார் திருக்கோவிலுாருக்கும், கள்ளக்குறிச்சி இந்திராணி சங்கராபுரத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News