150 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்ட வருவாய்த் துறை
சுதந்திர தினத்தில் கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம் என அறிவித்ததால் சோழவரத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 150 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு இடத்தை வருவாய்த்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அகற்றி இடத்தை மீட்டனர்
சுதந்திர தினத்தில் கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம் என அறிவித்ததால் சோழவரத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 150 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு இடத்தை வருவாய்த்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அகற்றி இடத்தை மீட்டனர் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒரக்காடு பகுதியில் சுமார் 14. 50 ஏக்கர் ஜெயா தனியார் சோப்பு தொழிற்சாலை உரிமை கோரி வந்த நிலையில் அந்த இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் என ஏற்கனவே பலமுறை அப்பகுதியில் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என எச்சரிக்கை பலகை வைத்த நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் சுமார் 150 கோடி மதிப்பிலான இடத்தை அங்கு ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த மூன்று கட்டிடங்களை அகற்றும் பணியில் சோழவரம் போலீசார் பாதுகாப்புடன் வட்டாட்சியர் மதிவாணன் தலைமையில் உள்ள வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் சுதந்திர தின நாளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி மக்கள் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில் தற்போது வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அடிக்கடி ஆக்கிரமிப்புகளை அகற்றும் வருவாய் துறையினர் பாதியிலேயே விட்டு செல்வதால் தொடர்ந்து அரசு இடத்தை ஊராட்சிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். அப்பகுதியில் ஊராட்சி சார்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து அதனை செயல்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் எனவே அரசு பயன்பாட்டிற்கு அந்த இடத்தை முழுமையாக மீட்டு தர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.