வார இறுதி நாளில் சேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
By : King 24x7 Website
Update: 2023-12-14 10:54 GMT
வார இறுதி நாட்களை முன்னிட்டு, சேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டமானது, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இம் மாவட்டங்களில் மொத்தம் 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை (15ம் தேதி) முதல் 18ம் தேதி வரை சேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட், பெங்களூர், சென்னை கோயம்பேடு, ஓசூர், கோவை காந்திபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம், இணையதளம் (www.tnstc. in) மற்றும் ஆப் (tnstc.bus. ticket booking.app) மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இத்தகவலை சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.