கன்னியாகுமரி அடுத்த அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது வீட்டிலிருந்து வருகிறார். பால்குளம் பகுதியை சேர்ந்தவர் மதுரை வீரன் மகன் சுரேஷ் (20). செப்டிக் டேங்க் கிளீனிங் வேலையில் ஈடுபட்டு வருகிறார். சுரேஷ் அந்த சிறுமியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் இருவரும் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர். இதற்கிடையே ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சுரேஷ் திருமணம் செய்துள்ளார். பின்னர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.