ஹவுரா ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது

ஹவுரா ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை திருச்சி ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-01-10 13:10 GMT
திருச்சி ஜங்சன் ரயில் நேற்று மாலை 5 மணியளவில் என்.ஐ.பி. சி.ஐ.டி இன்ஸ்பெக்டர், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் செல்வராஜா மற்றும் ரயில்வே காவல்துறையினர் ஹவுரா விரைவு ரயில் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது, நடைமேடை 2 இல் சந்தேகப்படும் வகையில் 2 பேர் தோள் பைகளுடன் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பைகளை காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் 8 மூட்டைகள் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. மொத்தம் 16 கிலோ. அவற்றின் மதிப்பு ரூ.3.2 இலட்சமாகும். விசாரணையில் திருநெல்வேலியை சேர்ந்த மாரியப்பன் மற்றும் முத்துக்குமார் என்பதும். இவர்கள் ஓடிசா மாநிலம் பிரஹாம்பூரில் ஒருவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 16 கிலோ கஞ்சா, இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News