16 கடைகள் பூட்டி சீல் வைப்பு:அதிகாரிகள் நடவடிக்கை.
16 கடைகள் பூட்டி சீல் வைத்து உரிமத்தையும் அதிகாரிகள் செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத் தரவின்பேரில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார், மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் 2 நாட் களில் மட்டும் 50 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமி ருந்து தடை செய்யப்பட்ட 30 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசாரின் அறிவுரைப்படி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் விழுப்பு ரம், கோலியனூர், வளவனூர், கண்டமங்கலம் பகுதிகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்டிக்கடைகள்,
பழ ஜூஸ் கடைகள் என 16 கடைகளை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாது காப்பு அலுவலர்கள் ஸ்டாலின் ராஜரத்தினம், கொளஞ்சி உள்ளிட்டோர் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அந்த கடைகளின் உரிமத் தையும் அதிகாரிகள், தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.