மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,62979 மகளிருக்கு உரிமைத்தொகை

Update: 2023-11-11 07:56 GMT

மகளிர் உரிமை தொகை வழங்கல்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 162979 மகளிருக்கு உரிமைத்தொகை மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 1,54,533 பயனாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது. தற்பொழுது விடுபட்டவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் நடைபெற்ற விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம் பூம்புகார் நிவேதாமுருகன், ராஜகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்ட விழாவில் 8,446 நபர்களுக்கு உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் பதினாறுகோடியே இருபத்தியொன்பது லட்சத்து எழுபத்தி ஒன்பதாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News