திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் நேற்று இரவு காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்றதாக 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் காயம் அடைந்த சிறுவன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பாப்பாக்குடியில் இரு தரப்பு மோதலை தடுக்க சென்ற காவல் ஆய்வாளரை வெட்ட முயற்சி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.