17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர் .;
17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு பெரம்பலூர் மாவட்டம் கைகளத்துரை சேர்ந்த 17 வயது சிறுமியை அதே ஊரை சேர்ந்த வேலுசாமி மகன் வேல்முருகன் வயது 27/2019என்பவர் என்பவர் காதலிப்பதாக கூறி 18.04.2019ம்தேதி அவரது வீட்டிற்கு இழுத்துச் சென்று உடலுறவு கொண்டு கர்ப்பமாக்கி உள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர் .அந்த வழக்கில் மரபணு பரிசோதனையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த குழந்தையின் உயிரியல் தந்தை வேல்முருகன் தான் என்பது உறுதிப்படுத்தப் பட்டது .மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்பட்ட பிறகு அந்த வழக்கை மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் திரு எம் சுந்தரராஜன் ஆஜரானார் வழக்கை விசாரித்த பெரம்பலூர் மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிராக பலமுறை பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக வேல்முருகனுக்கு 20 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனையுடன் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்தும் அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கடும் காவல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டதோடு, பாதிக்கப்பட்ட சிறுமியை கற்பமாக்கிய குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்க காவல் சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்ததுடன் அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் மேற்கண்ட அபராத தொகையில் ரூபாய் ஒரு லட்சம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும் மேலும் தமிழக அரசு ரூபாய் மூன்று லட்சம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார் தீர்ப்பினை அடுத்து வேல்முருகனை போலீசார் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைத்தனர்.