₹17.88 கோடி மதிப்பில் பாதள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வந்தது
நெற்குன்றம் 148 வது வார்டில் 17.88 கோடி மதிப்பில் பாதள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வந்தது
நெற்குன்றம் 148 வது வார்டில் 17.88 கோடி மதிப்பில் பாதள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வந்தது. பூந்தமல்லி அடுத்த மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் மண்டலம்-11 ல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை , கழிவு நீர் அகற்று வாரியம் சார்பில் மண்டலத்திற்கு பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் 148 வது வார்டு நெற்குன்றம் , ஜானகி ராமன் காலனி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் 17.88 கோடி திட்ட மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று தலைமை செயலகத்தில் இருந்து அமைச்சர் உடன் சேர்ந்து தொடங்கி வைத்தார்.அதனை செயல்படுத்தும் விதமாக இன்று ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டிற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் க. கணபதி துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வின் போது உடன் மண்டல குழு தலைவர் நௌம்பூர் ராஜன், கவுன்சிலர் கிரிதரன் மற்றும் பொறியாளர்கள் கண்ணன், பிரவீன், மகாலட்சுமி, கலைச்செல்வி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் குறித்து அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார் பின்பு அங்கு வந்திருந்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன...