18 வயதிற்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பை தளர்த்தி உதவித்தொகை வழங்க தேர்வு செய்திடும் மருத்துவ மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து
34 மாற்றுத்திறனாளிகளுக்கு (பெரம்பலூர்-03, வேப்பந்தட்டை-10, ஆலத்துார்- 14, குன்னம்-07) வயது வரம்பை தளர்த்திடும் வகையில், மருத்துவ மதிப்பீட்டு முகாம் இன்று நடைபெற்றது.;
பெரம்பலூர் மாவட்டம் 18 வயதிற்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பை தளர்த்தி உதவித்தொகை வழங்க தேர்வு செய்திடும் மருத்துவ மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (18.02.2028) நடைபெற்ற 18 வயதிற்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பை தளர்த்தி உதவித்தொகை வழங்க தேர்வு செய்திடும் மருத்துவ மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டார். தமிழ்நாடு அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 18 வயதிற்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிட திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களின் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்களிடமிருந்து பெறப்பட்ட பெயர் பட்டியலின் அடிப்படையில் 34 மாற்றுத்திறனாளிகளுக்கு (பெரம்பலூர்-03, வேப்பந்தட்டை-10, ஆலத்துார்- 14, குன்னம்-07) வயது வரம்பை தளர்த்திடும் வகையில், மருத்துவ மதிப்பீட்டு முகாம் இன்று நடைபெற்றது. காது,மூக்கு,தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், கண் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம் என பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சொர்ணராஜ், மருத்துவர்கள் மரு.சுனில் குமார் (எலும்பியல் சிறப்பு), மரு.சிவக்குமார் (காது, மூக்கு, தொண்டை சிறப்பு) மனநல சிறப்பு மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்