நெல்லை மாநகர மாவட்ட அதிமுகவின் 18வது வார்டு 178 எண் பூத் கமிட்டி கூட்டம் இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில் நெல்லை மேற்கு பகுதி அதிமுக செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். 18வது வார்டு வட்ட செயலாளர் வழக்கறிஞர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். இதில் வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய கட்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.