ஆத்தூரில்18 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடியாக அறிவிப்பு

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி 18 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி தீவிர கண்காணிக்கப்படுகிறது.

Update: 2024-04-18 16:02 GMT

தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளளையில் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பணிகள் நடைபெற்ற ஒரு நிலையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பும்பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,

ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதட்டமான 18 வாக்குச்சாவடிகளுக்கு கண்காணிப்பு கேமரா கூடுதல் போலீசார் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News