நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.1.86 கோடியில் சாலை பணிகள்
Update: 2023-11-26 04:51 GMT
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட குளத்தூர் மெயின் ரோடு, லாலாவிளை மற்றும் இளங்கடை சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கப்படுகிறது. ரூ.1.86 கோடி மதிப்பில் நடைபெறும் இந்த பணிகளை, மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜசீலி, மாமன்ற உறுப்பினர் பியாசா ஹாஜி பாபு, மாநகராட்சி தொழில்நுட்ப அதிகாரி பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.