எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி

ஜன.19ஆம் தேதி எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2024-01-13 11:54 GMT

எடப்பாடி பழனிச்சாமி 

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஒவ்வொரு மாவடங்களிலும் தொகுதி வாரியாக நடைபெற உள்ளது.

இதில் கட்சியின் சிறப்பு பேச்சாளர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். அதன்படி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மகளிர் அணி துணை செயலாளர் அமுதா, ஏ.ஆர். சந்திரகாசன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

Advertisement

அதுபோல் நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட சேந்தமங்கலம் தொகுதியில் மாவட்ட செயலாளர் தங்கமணி எம்.எல்.ஏ., செய்தி தொடர்பாளர் ஆவடிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. பூவை செழியன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள். இதில் இளைஞர் அணி, மகளிர் அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், தகவல் தொழில் நுட்பப்பிரிவு, வர்த்தக அணி உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News