சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் கைது
சங்ககிரியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை தனிப்படை போலீசார் கைது செய்த சம்பவத்தால் பரபரப்பு;
By : King 24x7 Website
Update: 2023-12-18 16:56 GMT
சங்ககிரியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை தனிப்படை போலீசார் கைது செய்த சம்பவத்தால் பரபரப்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி, மலையடிவாரம், கோரிக்காடு பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக சேலம் மாவட்ட காவல்கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் பணம் வைத்து சூதாடிய சங்ககிரி, குமாரபாளையம், ஈரோடு, திருப்பூர், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 19 பேரை பிடித்து சங்ககிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.5,58, ரூபாய் மற்றும் சொகுசு கார் உள்ளிட்ட வைகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்ககிரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் திடீரென நடத்திய சோதனையில் 5.58 ரொக்கம் பணம் சொகுசு கார் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.