2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

வெவ்வேறு சம்பவத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக் கப்பட்டது. இதில் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்;

Update: 2025-02-06 11:31 GMT
திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் 14 வயது சிறுமி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கஞ்சா மற்றும் குடிபோதையில் துஷ்யேந்திரன் (வயது 38) என்பவர் சிறுமியின் கையைப்பிடித்து இழுத்து, கட்டிப்பிடிக்க முயன்றதுடன், சிறுமியிடம் ஆபாச வார்த்தைக ளால் பேசியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த சிறுமியின் தந்தை, தனது உறவினருடன் சேர்ந்து துஷ்யேந்திரனை தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீ சார் வழக்குப்பதிவுசெய்து சிறுமியின் தந்தை, உறவினர் இருவரை கைது செய்தனர். மேலும், சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல் திருச்சி, பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் ராஜாக்கனி (45). இவர் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தார். இதுதொடர்பாக குழந்தைகள் உதவி மையத்துக்கு புகார் சென்றது. குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் மீனா அளித்த புகாரின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாக்கனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News