2 வயது குழந்தையை வெறி நாய் கடித்து தீவிர சிகிச்சை
2 வயது குழந்தையை வெறி நாய் கடித்து குதறியதில் குழந்தை படுகாயம் அடைந்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ செலவிற்கு 4 லட்சம் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியதால் கூலி தொழிலாளி தனது மகனை காப்பாற்ற பொதுமக்களிடம் கையேந்தி உதவி கேட்டு உள்ளார்;
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அருகே 2 வயது குழந்தையை வெறி நாய் கடித்து குதறியதில் குழந்தை படுகாயம் அடைந்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ செலவிற்கு 4 லட்சம் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியதால் கூலி தொழிலாளி தனது மகனை காப்பாற்ற பொதுமக்களிடம் கையேந்தி உதவி கேட்டு உள்ளார். இது நாளில் மற்றொரு சிறுவனையும் இதே பகுதியில் ஆர்.கே. பேட்டையில் தெரு நாய் கடித்து அரசு மருத்துவமனையில் அனுமதி. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையில் கிருஷ்ணாபுரம் அடுத்த மூரக்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் பழனி. இவரது 2 வயது குழந்தை வெற்றிவேல் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வீட்டில் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறி நாய் கடித்து குழந்தை படுகாயம் அடைந்தது. இதையெடுத்து படுகாயம் அடைந்த குழந்தையை வேலூர் சி.எம்.சி.மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, கிராமத்தில் பல்வேறு பகுதிகளில் நாய்கள் தொல்லை தொடர்ச்சியாக இருந்து வருவதாகவும், பலருக்கு இதுபோன்று நாய்கள் கடித்து காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக புகார் தெரிவித்தனர். மேலும் தெரு நாய்களை கட்டுப்படுத்தாமல் தொடர்ச்சியாக புகார் தெரிவித்தாலும் கண்டுகொள்ளாமல் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன் வராததால் தற்போது இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர் மேலும் குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் நான்கு லட்சம் வரை செலவாகும் என்று கூறியதால் குழந்தைக்கு மேல் சிகிச்சை செய்ய கூலி தொழிலாளி பழனி இடம் போதிய பணம் இல்லாததால் பொதுமக்களிடம் கையேந்தி நிற்கிறார் அரசும் இவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர் இதேபோல் ஆர்.கே. பேட்டை பஜார் பகுதியில் அரசு பள்ளிகளில் சந்திரமௌலி என்ற சிறுவனை நாய் கடித்ததில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சிறுவனின் தந்தை வெங்கடேசன் கூலி தொழிலாளி ஆவார் இது மட்டுமல்லாமல் தெரு நாய்களுக்கு உரிய கருத்தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சுற்றித்திறியும் நாய்களை பிடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூரகுப்பம் கிராம மக்கள் ஆர்.கே. பேட்டை கோரிக்கை வைத்துள்ளனர் சிகிச்சைக்கு ரூபாய் 4 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவிப்பதால் கூலி வேலை செய்து வரும் தந்தை பழனி செய்வதறியாம் தவித்து வருகிறார்