2 லட்சம் டன் மாம்பழங்கள் அழுகி வீணாகும் அவலம்
பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 2 லட்சம் டன் மாம்பழங்கள் அழுகி வீணாகும் அவலம்;
பாலக்கோடு தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம், மாரண்டஹள்ளி, பெரியாம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் நடப்பு பருவத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் செந்தூரா, பெங்களூரா, அல்போன்சா, பீத்தர், மல்கோவா, உள்ளிட்ட 12 வாகையான மா வகைகள், 2லட்சம் டன் அளவில் விளைந்து அறுவடைக்கு தயராக உள்ளது. உரிய விலை கிடைக்காததால், மாங்காய்களை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே பழுத்து அழுகி வீனாகி வருகிறது. மேலும் பழங்களை சாலையோரம் கொட்டி வருவதால் குரங்குகளுக்கும், பறவைகளுக்கும் உணவாகி வருகிறது. எனவே தமிழக அரசு பாலக்கோட்டை மையமாக வைத்து, அரசு மாங்கூழ் தொழிற்சாலை தொடங்குவதன் மூலம் மா விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் என இன்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்