2-வது சனிக்கிழமை, வளர்பிறை முகூர்த்தம்: சேலம் கோட்டத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்
அதிகாரிகள் தகவல்;
2-வது சனிக்கிழமை மற்றும் வளர்பிறை முகூர்த்த நாளையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பண்டிகை மற்றும் முக்கிய திருவிழா நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று (2-வது சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வளர்பிறை முகூர்த்த தினங்களை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி வரை சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.