திருட்டு வழக்கில் 2 பேர் கைது !

குளச்சல் திருட்டு வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்கள்.;

Update: 2024-04-27 11:52 GMT

கைது

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உடையார் விளை பகுதி கார்லூஸ் (63) என்ற  நிலப் புரோக்கர் வீட்டில் இருந்து கடந்த 8-ம் தேதி ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

இது தொடர்பாக கார்லூஸ் குளச்சல் போலீசில்  புகார் செய்தார். குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கேமராவில் சம்பவம் நடந்த பகுதியில் பழைய பொருட்கள் சேகரிக்கும் நான்கு மர்ம நபர்களின் உருவம் பதிவாகியிருந்தது.

Advertisement

சந்தேகத்தின் பெயரில் அவர்களை தனிப்படையினரும் விசாரித்து வந்தனர்.     இந்த வழக்கில் கடந்த 9-ம் ம் தேதி குளச்சல் பள்ளி முக்கு பகுதியில் வைத்து கொட்டாரம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை (29) என்பவரை  கைது செய்தனர்.

விசாரணையில் இவர் கார்லூஸ் வீட்டில் திருடிய நான்கு நபர்களில்  ஒருவர் என தெரிய வந்தது. மற்ற மூன்று பேரும் தலைமறைவாகி இருந்த நிலையில் ராஜாக்கமங்கலம் அண்ணா காலனி சேர்ந்த சின்னராசு (29) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News