குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 போ் கைது
திருச்சியில் கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.;
Update: 2024-03-03 05:06 GMT
குண்டா் தடுப்புச் சட்டம்
திருவானைக்கா சந்நிதி வீதி நான்குகால் மண்டபம் அருகே மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த ரௌடி மண்டவெட்டு மாதவனை ஜனவரி 23 ஆம் தேதி வெட்டி கொலை செய்த வழக்கில் திருவானைக்காவைச் சோ்ந்த ம. வீரமணிகண்டன் (33), திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பைச் சோ்ந்த செ. சங்கா் (50) ஆகியோரை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். விசாரணையில், மணிகண்டன் மீது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக 2 வழக்குகளும், சங்கா் மீது திருட்டு வழக்கும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேற்கண்ட இருவரின் குற்றச்செயல்களைத் தடுக்கும் விதமாக திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, வீரமணிகண்டன் மற்றும் சங்கா் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சனிக்கிழமை ஆணை பிறப்பித்தாா்.