திருப்பத்தூரில் நடைபெறும் +2 தேர்வு : மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் +2 தேர்வு எழுதும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தீடிர் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2024-03-01 10:35 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் +2 தேர்வு எழுதும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தீடிர் ஆய்வு மேற்கொண்டார்


திருப்பத்தூர் மாவட்டம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பொதுத் தேர்வு நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டத்தில் 12697 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். தமிழகம் முழுவதும் இன்று முதல் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பொதுத்தேர்வு துவங்கிய நிலையில். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ,ஆம்பூர் நாட்றம்பள்ளி,ஆலங்காயம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 58 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 136 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மொத்தம் 12697 மாணவ மாணவியர்கள் இன்று பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 136 பள்ளிகளை சேர்ந்த 6009 மாணவர்களும், 6688 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 697 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதனை தொடர்ந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதும் மையத்தை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தீடிர் ஆய்வு மேற்கொண்டார் துறை சார்ந்த அதிகாரியிடம் மாணவர்களின் வருகை குறித்து கேட்டு அறிந்தார் உடன் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News