சிவகிரியில் குட்கா விற்ற 2 பேர் கைது

சிவகிரி அருகே போலீசார் நடத்திய சோதனையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-07 08:26 GMT

 அன்னச்சாமி, மகேந்திரன்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இணாம்கோவில்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் க்கு ரகசிய தகவல் கிடைத்தது அதனைத் தொடர்ந்து சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி தலைமையில், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் கணேசன், தனிப்பிரிவு மகேந்திரன், காளிமுத்து, சண்முகையா ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைத்தார்.

இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் இணாம்கோவில்பட்டி பகுதியில் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணன் கோவில் தெருவில் மகேந்திரன் என்பவரது வீட்டில் சோதனையிட்ட போது அங்கே 6 மூட்டை கணேஷ், 2 மூட்டை கூலிப், 3 மூட்டை புல்லட், 50 பாக்கெட் விமல் பாக்கு ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவற்றை பதுக்கி வைத்திருந்ததாக இணாம்கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் மகேந்திரன் (வயது - 49), கிழக்கு தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் அன்னச்சாமி (47) ஆகிய இருவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இருவரையும் சிவகிரி காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News