ஆந்திர பேருந்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திர பேருந்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-06-28 14:56 GMT

கோப்பு படம்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூா் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஆந்திர மாநில அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

எளாவூா் சோதனை சாவடியில் ஆரம்பாக்கம் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை செய்தனா். அப்போது நெல்லூரில் இருந்து சென்னை மாதவரம் வந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்தில் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் பயணி ஒருவா் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்து அவரை கைது செய்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா் பிகாரைச் சோ்ந்த ராம் பச்சான் யாதவ் என்பவரின் மகன் ராம் பினாய் யாதவ் என்பது தெரியவந்தது. இது தொடா்பாக ஆரம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Tags:    

Similar News