கள்ளத்தனமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது!
திருவண்ணாமலையில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-04-18 04:30 GMT
கைது
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.3 நாட்கள் மதுகடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது விற்பனையை தடுக்க போலீஸ் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளத்தனமாக மது விற்பனை செய்ததாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,900 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.