குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
திருவண்ணாமலையில் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டவரையும், கஞ்சா விற்பனை செய்தவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
Update: 2024-04-16 07:24 GMT
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் (வயது 23) நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். அதேபோல் நல்லவன்பாளையம் பள்ளிகூடத் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (24) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சட்ட விரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக அருண்குமார், மணிகண்டன் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.